ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தப் படியாக இந்தியக் கடவுச்சீட்டு ஆனது உலகில் இரண்டாவது மலிவான கடவுச் சீட்டாக கூறப் படுகிறது.
இந்தியக் கடவுச்சீட்டுகள் என்பது செல்லுபடியாகும் ஆண்டிற்கான செலவினங்களின் அடிப்படையில் மலிவானவையாகும்.
தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இருப்பினும், இந்தியக் கடவுச்சீட்டு மூலம், மக்கள் 62 நாடுகளுக்கு மட்டுமே நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் செய்ய முடியும்.
முதல் இடத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டு, பெறுதல் மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத பயண அணுகல் உள்ள நாடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் மலிவானது ஆகும்.