மலேசியாவில் மூன்று மாத கைக் குழந்தைக்கு போலியோ இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 27 ஆண்டுகளில் மலேசியாவில் முதன்முறையாக போலியோ நோய் பாதிப்பு தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் கடைசியாக போலியோ நோய் பாதிப்பானது 1992 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாடு போலியோ இல்லாததாக அறிவிக்கப்பட்டது. இந்த சமீபத்திய நோய் பாதிப்பில், குழந்தைக்குத் தடுப்பு மருந்தின் மூலம் பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை 1 (vaccine-derived poliovirus Type 1 - VDPV1) தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
VDPV1 என்பது ஒரு சுழற்சி தடுப்பு மருந்தின் மூலம் பெறப்பட்ட போலியோ வைரஸ் (cVDPV - Circulating Vaccine-Derived Poliovirus) வகை 1 என வகைப்படுத்தப் பட்டுள்ளது.