மலேரியாவை கண்டறிய பெங்களுரிலுள்ள இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் புதிய கருவியை கண்டறிந்துள்ளனர்.
தற்போது இரத்த சிவப்பு அணுக்களில் உள்பகுதியில் மலேரிய பாரசைட் பிளாஸ்மோடியம் இருப்பதை நுண்ணோக்கி வழியே பார்த்து கண்டறியும் முறையே உள்ளது. ஆனால் புதிய கருவியின் மூலம் இரத்த சிவப்பணுக்களில் பாரசைட் இருப்பதை விட மலேரிய தாக்குதல் உள்ளவர்களிடம் அருகில் இருக்கும்போதே கண்டறிய முடியும். மலேரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் அருகே உள்ள இரத்த சிவப்பணுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளதைப் போலவே மிகுந்த விறைப்புடன் இருக்கும். இதுவே அதனை எளிதில் கண்டறிய உதவுகிறது.
சாதாரண இரத்த சிவப்பணுக்களின் பிரவுனியன் இயக்கமானது (மூலக்கூறுகளின் சீரற்ற இயக்கம்) மலேரியாவால் பாதிக்கப்பட்ட சிவப்பணுக்களில் உள்ள பிரவுனியன் இயக்கத்தை விட வித்தியாசமாக இருக்கும்.