2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு பாதிப்புகள் கூட பதிவாகாத நிலையில், இந்த மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் மலேரியாவை ஒழிப்பதில் தமிழ்நாடு ஒரு படி முன்னிலையில் உள்ளது.
2014 ஆம் ஆண்டில் இருந்து தேசியக் கட்டமைப்பை படிப்படியாக ஏற்று, 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்த நோயினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
2020 ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் 891 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கையானது ஓராண்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் (ஆகஸ்ட் வரை) பாதிப்பு எண்ணிக்கை 233 ஆகக் குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 80% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சியின் பங்கு ஆனது 2023 ஆம் ஆண்டில் 45% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு மேலும் 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் 40% ஆக பதிவாகியுள்ளது.
1990 முதல் 1998 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பாதிப்புகள் பதிவாகின.