TNPSC Thervupettagam

மலேரியா நோய் வெடிப்பு முன்னறிவிப்பு

November 11 , 2020 1480 days 620 0
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது அடுத்த பருவ மழைக் காலத்திலிருந்து மலேரியா நோய் வெடிப்பு முன்னறிவிப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • இந்தத் துறையானது தனது முதலாவது ஆய்வை நாக்பூரில் மேற்கொண்டது.
  • உலக மலேரியா அறிக்கையின்படி, உலக மலேரியா பாதிப்பில் 85% பாதிப்பை இந்தியா கொண்டுள்ளது.
  • மேலும், தேசிய சுகாதாரத் தளமானது மிகப் பெரும்பான்மையான மலேரியா நோய் பாதிப்புகள் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இங்கு அடர்ந்த  காடுகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகள் அதிகம் காணப்படுவதே இதற்குக் காரணமாகும்.
  • இதில் சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் உள்ளடங்கியுள்ளன.

தடுப்பு மருந்து

  • மலேரியா நோய்த் தடுப்பு மருந்தானது ஆர்டிஎஸ், எஸ்எனப்படுகின்றது.
  • இது மாஸ்குய்ரிக்ஸ் என்று விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய மருந்து நிறுவனத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தடுப்பு மருந்து இந்தியாவில் பதிவு செய்யப் படவில்லை.
  • இந்தத் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த முதலாவது நாடு மலாவி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்