அறிவியல் மேம்பாடுகள் என்ற ஒரு பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்பு இருந்ததை விட இரு மடங்கு வரையில் இப்போது உருகி வருகின்றன.
இவர்கள் 40 ஆண்டு கால செயற்கைக்கோள் தகவல்கள், இந்தியா முழுவதும் 2000 கிலோ மீட்டர்கள், சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியவற்றைக் கண்காணித்தனர்.
இவர்கள் 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பனிக்கட்டியின் ஒரு அடி மற்றும் அரை அடிக்கு நிகரான பனிப்பாறைகளின் இழப்பைக் கண்டறிந்துள்ளனர்.
சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1975 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இருந்ததை விட 2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 1.8 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் அதிகரித்திருக்கின்றது.