TNPSC Thervupettagam

மலைப் பகுதிகளுக்கான விதிகள், 2020

April 4 , 2020 1753 days 717 0
  • தமிழ்நாடு மாநில அரசானது, மலைப் பகுதிகள் உள்பட நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் அனுமதி பெறாத வாழ்விடங்கள் (அல்லது அமைவிடங்கள்) மற்றும் மனைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்துள்ளது.
  • தமிழ்நாடு அரசானது மலைப் பகுதிகளில் உள்ள அனுமதி பெறாத வாழ்விடங்கள் மற்றும் மனைகள் ஆகியவற்றுக்கான தமிழ்நாடு ஒழுங்குமுறை என்ற ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
  • மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் (HACA - Hill Area Conservation Authority) கட்டுப்பாட்டில் வரும் மலைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான அனுமதி பெறாத வாழ்விடங்கள் அமைந்துள்ளன.
  • மார்ச் 30 அன்று வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறையினால் வழங்கப்பட்ட ஒரு அரசாணையானது இது போன்ற வாழ்விடங்களில் உள்ள மனைகளானது “ஏழை மற்றும் அப்பாவி மக்களால்” வாங்கப் பட்டுள்ளது என்று கூறுகின்றது.
  • இந்த அமைவிடங்களை அவற்றின் முந்தையப் பயன்பாட்டிற்கு மீண்டும் பயன்படுத்த முடியாது.
  • இருப்பினும், இந்த அரசாணையானது யானைப் பெருவழித் தடங்கள் மற்றும் சில பகுதிகளின் கீழ் வராத பகுதிகளில் உள்ள அனுமதி பெறாத அமைவிடங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.
  • இந்த அரசாணையானது குடியிருப்புக் கட்டமைப்புகளுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த ஆணையானது வணிக ரீதியான கட்டமைப்புகளுக்குப் பயனளிக்காது.
  • மாநில அரசானது அனைத்து யானைப் பெருவழித் தடங்களை இனிமேல் தான் அறிவிக்க இருக்கின்றது. இது வனவிலங்குச்  சரணாலயங்களைச் சுற்றி இடைமுகப் பகுதிகளை (Buffer Zones) அறிவிக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்