நில அதிர்வு அழுத்தத்தின் கீழ் உள்ள குவார்ட்ஸ் பாறைகளின் அழுத்த மின் விளைவு ஆனது குவார்ட்ஸ் இழைகளில் தங்கம் குவிவதற்குக் காரணமாகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கண்டத்தட்டு இயக்கங்களின் மோதல் போன்ற பெரிய அளவிலான புவியியல் செயல் முறைகள் நிகழ்ந்த மலைப் பகுதிகளில் பொதுவாக மலையாக்கத்தினால் உருவான தங்க அமைப்புகள் காணப்படுகின்றன.
பெரும் மலைகளை உருவாக்கும் கண்டத்தட்டு செயல்முறைகளின் போது உருவாகும் மலையாக்கக் குவார்ட்ஸ் இழைகளில் பெரிய தங்கக் கட்டிகள் பெரும்பாலும் காணப் படுகின்றன.
நிலநடுக்கங்களின் போது, குவார்ட்ஸ் படிகங்களின் மீது ஏற்படும் அழுத்தம், அவற்றின் மேற்பரப்பில் தங்கத்தைப் படிய வைப்பதற்கான பெரும் எதிர்வினையை ஏற்படுத்துவதால் இந்த தங்கக் கட்டிகள் உருவாகின்றன.
இந்தச் செயல்முறையானது மீண்டும் மீண்டும் நிகழ்வதால், இது தங்கக் கட்டிகள் குவிவதற்கு வழி வகுக்கிறது.