TNPSC Thervupettagam

மலையாக்க குவார்ட்ஸ் இழைகளில் தங்கக் கட்டிகள்

October 17 , 2024 37 days 113 0
  • நில அதிர்வு அழுத்தத்தின் கீழ் உள்ள குவார்ட்ஸ் பாறைகளின் அழுத்த மின் விளைவு ஆனது குவார்ட்ஸ் இழைகளில் தங்கம் குவிவதற்குக் காரணமாகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கண்டத்தட்டு இயக்கங்களின் மோதல் போன்ற பெரிய அளவிலான புவியியல் செயல் முறைகள் நிகழ்ந்த மலைப் பகுதிகளில் பொதுவாக மலையாக்கத்தினால் உருவான தங்க அமைப்புகள் காணப்படுகின்றன.
  • பெரும் மலைகளை உருவாக்கும் கண்டத்தட்டு செயல்முறைகளின் போது உருவாகும் மலையாக்கக் குவார்ட்ஸ் இழைகளில் பெரிய தங்கக் கட்டிகள் பெரும்பாலும் காணப் படுகின்றன.
  • நிலநடுக்கங்களின் போது, ​​குவார்ட்ஸ் படிகங்களின் மீது ஏற்படும் அழுத்தம், அவற்றின் மேற்பரப்பில் தங்கத்தைப் படிய வைப்பதற்கான பெரும் எதிர்வினையை ஏற்படுத்துவதால் இந்த தங்கக் கட்டிகள் உருவாகின்றன.
  • இந்தச் செயல்முறையானது மீண்டும் மீண்டும் நிகழ்வதால், இது தங்கக் கட்டிகள் குவிவதற்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்