நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது பத்மஸ்ரீ மல்லிகா சீனிவாசனை பொதுத் துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (Public enterprises Selection Board - PESB) தலைவராக நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் (TAFE - Tractors and Farm Equipment)) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.
TAFE நிறுவனமானது இந்திய அளவில் 2வது மற்றும் உலகின் மூன்றாவது அளவில் டிராக்டர்களை உற்பத்தி செய்யும் ஒரு பெரிய நிறுவனமாகும்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் (CPSEs) உயர்நிர்வாகப் பதவிகளை நியமிக்கும் பொறுப்பு பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்திடம் உள்ளது.
குறிப்பு
PESB வாரியத்தின் தலைவராக ஒரு தனியார் துறை நிபுணர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இவர் PESB வாரியத்தின் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு அல்லது 65 வயது எட்டும் வரை அந்தப் பதவியிலிருப்பார்.
இதற்கு முன்னாள் அப்பதவியிலிருந்த முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமாருக்குப் பிறகு இவர் இப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.