TNPSC Thervupettagam

மவோரி குழு - ஹாகா நடனம்

November 22 , 2024 16 hrs 0 min 39 0
  • நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர், ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க், சர்ச்சைக்குரிய ஒப்பந்தக் கோட்பாடுகள் மசோதாவிற்கு எதிராக குரல் கொடுத்து உள்ளார்.
  • அவர் அவை அமர்வின் போது அவர்களின் பாரம்பரிய மவோரி ஹக்கா என்ற ஒரு நடனத்தினையும் நிகழ்த்தினார்.
  • மவோரி ஹக்கா என்பது நியூசிலாந்தின் உள்ளார்ந்த கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகும்.
  • இது அதன் மிக சக்திவாய்ந்த ஆற்றல் தேவைப்படுதல், கடுமையான முகபாவனைகள் (புகானா) மற்றும் முத்திரை, கை சைகைகள் மற்றும் மந்திர உபசரிப்பு போன்ற உடல் அசைவுகளுக்கு பெயர் பெற்றது.
  • ஹக்கா என்பது ஒரு பழங்குடியினரின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சில  நிகழ்வுகள் குறித்த பல கதைகளுடன் ஒவ்வொரு பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும்.
  • ஒவ்வொன்றும் அதன் பெரும் தனித்துவமான நோக்கத்துடன் கூடிய பல்வேறு ஹக்கா வடிவங்கள் உள்ளன:
    • பெருபெரு: வலிமையை வெளிக்காட்டுவதற்காக வேண்டி போர் ஆயுதங்களைக் கொண்டு நிகழ்த்தப் படும் போர் முறை ஹக்கா.
    • கராஹூ: போர் வீரர்களின் தயார்நிலையைச் சோதிக்கும் ஒரு பகுதியளவு போர் சார்ந்த நடனம்.
    • ஹகா துய் வேவே: மகிழ்ச்சி அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் போரற்ற ஹக்கா.
    • கா மேட்டெ: தலைவர் எதிரியின் பிடியிலிருந்து தப்பித்த ஒர் கதையையும், பின்னர் அவர் ஒரு பெரிய மவோரி தலைவராக உருவெடுத்ததையும் கூறுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்