TNPSC Thervupettagam

மஹுவா மொய்த்ரா வெளியேற்றம்

December 14 , 2023 220 days 175 0
  • நெறிமுறைக் குழுவின் பரிந்துரையின் பேரில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
  • பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சித்து கேள்விகள் கேட்டதற்காக கோடிக் கணக்கில் பணம் மற்றும் பரிசுகள் உட்பட லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
  • பாராளுமன்ற விவகார அமைச்சர் இவரின் "நெறிமுறையற்ற நடத்தைக்காக” அவரை வெளியேற்றுவதற்கான ஒரு தீர்மானத்தை முன்வைத்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • மக்களவையில், அதிகாரிகள், ஊடகங்கள் அல்லது மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் புகார்களைச் சிறப்புரிமைக் குழு மதிப்பாய்வு செய்கிறது.
  • மக்களவையின் சட்டமியற்றுபவர்களுக்கு எதிரான சாமானியர்களின் புகார்களை விசாரிக்கும் ஒரே குழு நெறிமுறைக் குழுவாகும்.
  • திருமதி மொய்த்ரா தான் மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் 122வது சட்டப் பிரிவு, நாடாளுமன்றத்தில் நடக்கும் நடவடிக்கைகள் மீது முறையீடு செய்வதற்கு விலக்கு அளித்தாலும், அவர் சில சட்ட உரிமைகளை இதற்காகப் பயன்படுத்த முடியும்.
  • நெறிமுறைக் குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்களின் நெறிமுறையற்ற நடத்தை களை விசாரிக்கச் செய்றது, ஆனால் நெறிமுறையற்ற நடத்தை என்பது யாதென பாராளுமன்ற விதிகளால் வரையறுக்கப்படவில்லை.
  • 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் – மக்களவையில் இருந்து 10 பேர் மற்றும் மாநிலங்களவையில் இருந்து ஒருவர் – குறை தீர்ப்பிற்கு லஞ்சம் பெற்ற குற்றம் காரணமாக வெளியேற்றப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்