கோவாவில் உள்ள சால் நதியின் மாசுபாட்டை நீக்கி நீரை சுத்திகரிக்க புதிய மாசு கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (National River Conservation Plan - NRCP) மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகமானது அனுமதித்துள்ளது.
உயிரி வேதியியல் ஆக்ஸிஜன் தேவையின் அளவின் (Bio-Chemical Oxygen Demand) அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள நாட்டின் 302 மாசுபட்ட நதிப் படுகைகளுள் கோவாவின் சால் நதிப்படுகையும் ஒன்று என 2015 இல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board) தெரிவித்துள்ளது.
தேசிய நதி பாதுகாப்புத் திட்டமானது 14 இந்திய மாநிலங்களில் கங்கை நதி மற்றும் அதனுடைய கிளை நதிகள் அல்லாத 31க்கும் மேற்பட்ட பிற நதிகளின் தூய்மைப்படுத்தலுக்காக மத்திய அரசினால் முழுவதும் நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ஓர் திட்டமாகும்.
சால் நதியின் மாசுபாட்டளவை குறைக்கவும், நீரின் தரத்தை அதிகரிக்கவும் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
சால் நதி மாசுபாடு சுத்திகரிப்புத் திட்டமானது 2021ல் நிறைவடையச் செய்ய முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
NRPC திட்டத்திற்கு 100% மத்திய அரசின் நிதியுதவி அளிக்கப்படுகிறது.