‘மாஞ்சா நூல்கள்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் பட்டங்களைப் பறக்க விட பயன்படுத்தப் படும் கண்ணாடித் துகள் பூசப்பட்ட நூல்களின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்குத் தமிழக அரசு முழுத் தடை விதித்து உள்ளது.
இது நைலான், நெகிழி அல்லது வேறு ஏதேனும் செயற்கைப் பொருட்களால் செய்யப் பட்டதாக இருக்கலாம்.
இதற்கான ஆணையானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் தேதியன்று அரசினால் வெளியிடப்பட்டு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசிதழிலும் அறிவிக்கப் பட்டது.
இந்தத் தடையை மீறுபவர்கள் மீது 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டத்தின் 29வது பிரிவு, 1986) விதிகளின் கீழ் சட்டரீதியான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும்.