TNPSC Thervupettagam

மாஞ்சோலை குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு

December 7 , 2024 16 days 111 0
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (BBTCL) நிறுவனம் வழங்கும் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தினை (VRS) எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • வேலைவாய்ப்பு இழப்பால் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக் கொண்ட அனைத்து நிவாரணங்களையும் தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
  • 1928 ஆம் ஆண்டில் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய 99 ஆண்டு காலக் குத்தகை முடிவதற்கு முன்பே ஒட்டு மொத்தமாக மாஞ்சோலைத் தோட்டங்கள் என அழைக்கப் படும் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய இடங்களில் BBTCL நிறுவனம் தனது செயல்பாடுகளை முடிவிற்குக் கொண்டுவர முடிவு செய்தது.
  • அந்தப் பகுதியின் ஜமீன்தார் 3,388.78 ஹெக்டேர் பரப்பிலான நிலத்தினைத் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியிருந்தார்.
  • ஆனால் 1882 ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் வனச்சட்டத்தின் 26 மற்றும் 32 ஆகிய பிரிவுகளின் கீழ் 1937 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதியன்று சிங்கம்பட்டி தோட்டம் முழுவதையும் காடுகள் என்று அரசாங்கம் அறிவித்தது.
  • அதனைத் தொடர்ந்து, 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ஆம் தேதியன்று, அப்போதைய வனப் பறவைகள் மற்றும் விலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1912 என்ற சட்டத்தின் கீழ் அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பகுதி என்பது முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
  • இது நாட்டின் முதல் அறிவிக்கப்பட்ட புலிகள் சரணாலயமாக மாறியது.
  • 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று, 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் தோட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளடங்கியிருந்த பகுதிகளை முக்கியப் புலி வாழ்விடமாக அரசாங்கம் அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்