TNPSC Thervupettagam

மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை – அசாம்

December 9 , 2024 14 days 96 0
  • அசாம் மாநில அரசானது, உணவகங்கள், உணவு விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கும் சாப்பிடுவதற்கும் மாநிலம் முழுவதும் தடை விதித்து உள்ளது.
  • அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது சட்டவிரோதமானது அல்ல.
  • ஆனால் 2021 ஆம் ஆண்டின் அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் ஆனது, அந்த மாநிலத்தில் அனைத்துக் கால்நடைகளின் இடமாற்றம் மற்றும் படுகொலை மற்றும் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சிப் பொருட்களின் விற்பனை ஆகியவற்றினை ஒழுங்குபடுத்துகிறது.
  • இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும், கோவில் அல்லது சத்திரத்தின் (வைணவ மடாலயம்) ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிலும் கால்நடைகளைக் கொல்வதையும், மாட்டிறைச்சி விற்பனை செய்வதை தடுப்பதையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது.
  • இம்மசோதாவின் விதிகளை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்