இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான (Attorney General of India) முகுல் ரோஹத்கீ (Mukul Rohatgi) பிரதமர் தலைமையிலான உயர்மட்ட லோக்பால் தேர்ந்தெடுப்புக் குழுவில் (high-profile Lokpal selection committee) மாண்புடைய நீதிபதியாக (Eminent jurist) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உயர் மட்டக் குழுவானது ஊழலுக்கு எதிர்ப்புத் தீர்ப்பாயராக (anti-corruption ombudsman) நியமிக்கப்பட வேண்டியோர்களுக்கான நபர்களின் பெயர்களை பட்டியலிடும்.
சட்டவிதிமுறைகளின்படி, லோக்பாக் அமைப்பிற்கான நியமன செயல்முறைகளில் லோக்பால் உயர்மட்ட தேர்ந்தெடுப்புக் குழுவில் ஒரு பகுதியான மாண்புடைய நீதிபதி இடத்தை நிரப்புவது மிகவும் முக்கியமான செயலாகும்.
இந்த உயர் மட்ட லோக்பால் தேர்ந்தெடுப்புக் குழுவில் இந்தியப் பிரதமர், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மக்களவையின் பெரிய எதிர்க்கட்சியினுடைய தலைவர் (leader of the largest opposition party of Lokshaba) மற்றும் மாண்புடைய நீதிபதி ஆகியோர் இருப்பர்.
2013-ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் (Lokpal and Lokayukta Act of 2013) 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும் 16-வது மக்களவையில் பெரிய எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் இல்லாத காரணத்தால் இத்தனை ஆண்டுகள் இச்சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.