TNPSC Thervupettagam

மாதவிடாய் சுகாதார தினம் – மே 28

May 29 , 2019 2008 days 758 0
  • மாதவிடாய் சுகாதார தினம் என்ற ஒரு வருடாந்திர விழிப்புணர்வுத் தினமானது மே மாதம் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
  • இது சிறந்த மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் (menstrual hygiene management - MHM) முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • இது ஜெர்மனியில் உள்ள அரசு சாரா அமைப்பான வாஷ் யுனைடெட் (WASH United) என்ற அமைப்பால் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இத்தினமானது MHMவிற்காக சர்வதேச, தேசிய மற்றும் உள்ளுர் அளவிலான கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு குரல் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது.
  • 1947 ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் தொழிலாளர் சட்டங்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்புகளை அளிக்கின்றது.
  • இத்தினக் கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாடு அரசு சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ரூ.5 மதிப்புடைய சுகாதாரத் துணிகள் விற்பனை இயந்திரத்தை நிறுவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்