கடுமையான மாதவிடாய் வலி உள்ள பெண்களுக்கு மாதத்திற்கு மூன்று நாட்கள் ஒரு மருத்துவ விடுப்பு வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாற உள்ளது.
சில சூழ்நிலைகளில் இந்த விடுப்பு ஐந்து நாட்களுக்குக் கூட நீட்டிக்கப்படலாம்.
இந்தியா, ஜப்பான், தைவான், இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளும் மாதவிடாய் விடுப்புகளை வழங்குகிறது.
இந்தியாவில், பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு பெறச் சட்டப்பூர்வ உரிமை இல்லை.
ஆனால் பீகார் மாநிலத்தில், மாதவிடாய்க் காலத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்ட வகையில் இரண்டு நாட்கள் விடுப்பு வழங்கப்படுகிறது.