TNPSC Thervupettagam

மாநகராட்சி அமைப்புகளின் நிதி குறித்த அறிக்கை

November 18 , 2024 4 days 68 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RB) மாநகராட்சி அமைப்புகளின் நிதி நிலை குறித்த அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் கருத்துரு, "Own Sources of Revenue Generation in Municipal Corporations: Opportunities and Challenges - மாநகராட்சிக் கழகங்கள் அதன் சொந்த வருவாயினை ஈட்டுவதற்கான மூலங்கள்: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்" என்பதாகும்.
  • 2023-24 ஆம் ஆண்டில் வசூலான மொத்த வருவாயில், சொத்து வரி, தண்ணீர் வரி, மின்சார வரி, கல்வி வரி மற்றும் பிற உள்ளாட்சி வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சொந்த வரி வருவாய் ஆனது 30 சதவீதமாக இருந்தது.
  • அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள்தொகையுடன், நகர்ப்புறங்களில் உயர்தர பொதுச் சேவைகளுக்கான தேவை வேகமாக வளர்ந்து வருகிறது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வருவாய் வரவுகளின் உயர்வு ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக இருந்தது (திருத்தப்பட்ட மதிப்பீடு) என்ற நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் 20.1 சதவீதம் ஆக அதிகரிக்கும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் கூடுதலாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் உள்ள மாநகராட்சிக் கழகங்களுக்காக (11,104 கோடி ரூபாய்) 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தொகை ஒதுக்கப்பட்டது.
  • டெல்லி, ஆந்திரப் பிரதேசம், இராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள மாநகராட்சிக் கழகங்களில் கூடுதலாக 100 கோடி ரூபாய் (தமிழ்நாடு) முதல் 687 கோடி ரூபாய் (டெல்லி) வரையில் ஒதுக்கப் பட்டு உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் திரிபுரா, ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் உள்ள மாநகராட்சிக் கழகங்களில் உள்ள வருவாய் பற்றாக்குறைக்காக (-) 2 கோடி ரூபாய் (திரிபுரா) முதல் (-) 789 கோடி ரூபாய் (கேரளா) ஒதுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்