டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் என்பவரின் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.
ஓராண்டுக்குள் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை இந்தக் குழு அளிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் இதர மற்ற உறுப்பினர்கள்: சவீதா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் L. ஜவஹர்நேசன், கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் R. ராமானுஜம், மாநில திட்டக்குழு உறுப்பினர்களான சுல்தான் இஸ்மாயில் மற்றும் R . ஸ்ரீனிவாசன், யுனிசெஃப் அமைப்பின் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், தமிழ் எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன், முன்னாள் உலக சதுரங்கச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் T.M.கிருஷ்ணா, கல்வியாளர்கள் துளசிதாஸ் மற்றும் S.மாடசாமி, கீச்சாங்குப்பத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் R. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் ஆவர்.