இது முதலாவது மாநிலக் கல்விசார் சாதனை மதிப்பீடு ஆகும்.
இது அடிப்படை, ஆயத்த மற்றும் நடுத்தரக் கல்வி நிலைகளின் இறுதிக் கட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கான மதிப்பீடு ஆகும்.
இதில் மொழி மற்றும் கணிதத் திறன்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
இது அறிவுத் திறனின் மதிப்பீடு, மறுமதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு (PARAKH) என்ற தேசிய மதிப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
சத்தீஸ்கர், டெல்லி, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.