தேசியக் குற்றப் பதிவு வாரியம் ஆனது (NCRB) இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இணைய வெளிக் குற்றங்கள் சுமார் 24.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இணையவெளிக் குற்றங்களின் கீழ் மொத்தம் 65,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் பதிவானதை விட (52,974 வழக்குகள்) 24.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெங்களூரு மாநகரமானது, 22.6 சதவீத குற்றப் பத்திரிகை விகிதத்துடன் 2022 ஆம் ஆண்டில் 9940 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன் பெருநகரங்களில் (2020-2022) அதிக எண்ணிக்கையிலான இணைய வெளிக் குற்றங்கள் பதிவாகியுள்ள நகரமாகத் திகழ்கிறது.
இதைத் தொடர்ந்து அதே காலக் கட்டத்தில் இது மும்பையில் சுமார் 4724 ஆகவும், ஐதராபாத்தில் 4436 ஆகவும், புது டெல்லியில் 685 ஆகவும் இணைய வெளிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.