மாநிலங்களில் கல்வி உரிமைச் சட்டத்தினை அமல்படுத்துதல்
August 16 , 2024 99 days 161 0
கல்வி உரிமைச் சட்டத்தினை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் சார்ந்த அரசு உதவி பெறாத பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்குவதை கல்வி உரிமைச் சட்டம் கட்டாயமாக்குகிறது.
பஞ்சாப், கேரளா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநில அரசுகள் கல்வி உரிமைச் சட்ட விதிகளை அமல்படுத்தவில்லை.
2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 86வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்யும் 21 A என்ற பிரிவினை அறிமுகப்படுத்தியது.
கல்விக்கான நிதி ஒதுக்கீடானது 2014 ஆம் ஆண்டில் 68,000 கோடி ரூபாயாக இருந்தது என்ற நிலைமையில் 2024-25 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடானது சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவிற்கு ஒதுக்கப்பட்ட 72,473 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 73,008 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீடான சுமார் 57,244 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உயர்கல்விக்கு 47,619 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப் படுகிறது.