TNPSC Thervupettagam

மாநிலங்களில் MBBS இட வரம்பு

November 20 , 2023 244 days 164 0
  • மாநிலத்தில் 10 லட்சம் மக்களுக்கு 100 MBBS இடங்கள் என்ற விகிதம் குறித்த விதிமுறைகளை மறு ஆய்வு செய்யும் முடிவைத் தேசிய மருத்துவ ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.
  • தேசிய மருத்துவ ஆணையத்தின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் ஆனது, தற்போது இந்த விதிமுறையானது 2025-26 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
  • தேசிய மருத்துவ ஆணையம் ஆனது, முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இளங்கலை கல்வி இடங்களின் எண்ணிக்கையை 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 என வரையறைப்படுத்தியது.
  • ஒரு மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவிலான சேர்க்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அவ்விடங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இந்த நடவடிக்கையானது, சுகாதார நிபுணர்களின் எண்ணிக்கையில் பிராந்திய அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது மற்றும் பயன்மிக்க கல்வித் தரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த விகிதத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப் பட்டால் நாட்டில் சுமார் 40,000 MBBS இடங்கள் கூடுதலாகக் கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்