மாநில அரசுகள் ஒராண்டிற்கான தங்களது நிகர கடன் வரம்புகளை விட கூடுதலாக 2.04 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெறலாம்.
இந்த ஆண்டு சுமார் 61,000 கோடி ரூபாய் கூடுதல் கடன் பெறுவதற்கு 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% என்ற நிகர கடன் உச்சவரம்புக்கு மேலாக உள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டத்திற்குத் தேவையான பங்களிப்புகளை செலுத்துவதன் மூலம் தங்கள் ஓய்வூதியப் பொறுப்புகளைப் பூர்த்தி செய்த மாநிலங்களுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநில அரசுகள் இந்த ஆண்டு 1.43 லட்சம் கோடி ரூபாய்க்கு சற்று அதிகமாக நிதி திரட்டத் தகுதி பெற்றுள்ளன.
15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, இந்த ஆண்டிற்கான சாதாரண நிகர கடன் உச்சவரம்பு 8,59,988 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.