நிதி ஆயோக் அமைப்பானது மாநிலங்களுக்கான நிதி ஆயோக் என்ற எண்ணிம பல்துறை இடைமுக தகவல் பகிர்வு தளத்தினைத் தொடங்கியுள்ளது.
இது கொள்கை மற்றும் ஆளுமைக்கான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை (DPI) உருவாக்கும்.
இது அரசாங்கத்தின் விக்சித் பாரத் செயல் திட்டத்திற்குத் தேவையான பல ஆவணங்கள் மற்றும் தரவுத் தொகுப்புகளை வழங்கும் ஓர் ஒருங்கிணைந்த தளம் ஆகும்.
மாநிலங்களுக்கான நிதி ஆயோக் தளமானது, 7,500 சிறந்த நடைமுறைகள், 5,000 கொள்கை ஆவணங்கள், 900க்கும் மேற்பட்ட தரவுத்தொகுப்புகள், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றின் 1,400 தரவு விவரங்கள் ஆகியவற்றினை உள்ளடக்கிய ஒரு பல் துறை நேரடிக் களஞ்சியமாக இருக்கும்.
இது மக்கள்தொகை மற்றும் சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் 350 நிதி ஆயோக் அமைப்பின் வெளியீடுகளால் வெளிக் கொணரப் பட்டது.