நவம்பர் 01 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய எட்டு இந்திய மாநிலங்கள் தனது உருவாக்க தினத்தினைக் கொண்டாடின.
தமிழ்நாடு மாநிலமானது, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மெட்ராஸ் (மதராஸ்) மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இது பின்னர் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு என மறு பெயரிடப் பட்டது.
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று தனி ஆந்திரப் பிரதேச மாநிலமானது உருவாக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் ஆனது 2000 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று உருவாக்கப் பட்டது.
ஹரியானா மாநிலம் ஆனது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று கிழக்கு பஞ்சாப் மாநிலத்திலிருந்து மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு ஒரு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
கர்நாடகாவானது, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மைசூர் மாநிலமாக உருவாக்கப் பட்டது.
பின்னர் 1973 ஆம் ஆண்டில் கர்நாடகா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று கேரளா உருவாக்கப்பட்டது.
மாநிலங்களின் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் (1966) கீழ், பஞ்சாப் மாநிலமானது உருவானதைக் குறிக்கும் வகையில் நவம்பர் 01 ஆம் தேதியன்று மாநிலம் முழுவதும் பஞ்சாப் தினம் கொண்டாடப் படுகிறது.