TNPSC Thervupettagam

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2023-24

May 16 , 2024 64 days 209 0
  • 2023-24 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ஆனது, 1,52,030.77 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான இறுதிக் கணக்குகளில் 1,50,222.75 கோடியாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது சிறிதளவு அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகளில் SOTR 75.6% பங்கினை அளிக்கிறது.
  • SOTR மதிப்பீடுகள் ஆனது, 1,81,182 கோடி ரூபாய் என்ற ஆரம்பக்கட்ட மதிப்பீட்டில் இருந்து 2023-24 ஆம் ஆண்டில் 1,70,147 கோடி ரூபாயாக மாற்றப்பட்டது.
  • SOTR வருவாய்களில், 2022-23 ஆம் ஆண்டில் 53,822.72 கோடி ரூபாயிலிருந்த மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 15.11% அதிகரித்து 61,960.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 17,559.89 கோடி ரூபாயாக இருந்த பத்திரங்கள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் பெறப்பட்ட மாநில அரசின் வருவாய் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 8.3% அதிகரித்து 19,013.36 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 247.48 கோடி ரூபாயாக இருந்த நில வருவாய் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 255.87 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 59,143.52 கோடி ரூபாயாக இருந்த விற்பனை, வர்த்தகம் போன்றவற்றின் மீதான வரிகள் (பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியும் அடங்கும்) மூலமான வருமானம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 60,026.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 10422.61 கோடியாக இருந்த மாநில கலால் வரிகள் 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 10,774.29 கோடி ரூபாயாக அதிகரித்தது.
  • இவற்றையும் சேர்த்து, 2023-24 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 2,62,382.45 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவு மதிப்பீடு சுமார் 2,72,576.80 கோடி ரூபாயாக திருத்தியமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்