TNPSC Thervupettagam

மாநிலத்தில் தொழிற்சாலை வேலைவாய்ப்பு

October 5 , 2024 49 days 118 0
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத் தொழில்துறைக் கணக்கெடுப்பு (ASI) ஆனது, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
  • உற்பத்தித் துறையில் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
  • இந்தியா முழுவதும் 1,84,94,962 நபர்கள் தொழிற்சாலைகளில் வேலையில் ஈடுபட்டு உள்ளனர் என்ற நிலையில் இதில் தமிழ்நாடு மாநிலத்தின் பங்கு 15% ஆக உள்ளது.
  • மொத்தமுள்ள 2,53,334 தொழிற்சாலைகளில் 15.66% தொழிற்சாலைகளைக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியன உற்பத்தித் துறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்தும் முதல் ஐந்து மாநிலங்கள் ஆகும்.
  • இந்த 5 மாநிலங்கள் ஆனது மொத்த உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பில் சுமார் 55% பங்கினைக் கொண்டுள்ளன.
  • பெரிய மாநிலங்களில், மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) அடிப்படையில், 2022-23 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்