2022-23 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத் தொழில்துறைக் கணக்கெடுப்பு (ASI) ஆனது, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
உற்பத்தித் துறையில் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இந்தியா முழுவதும் 1,84,94,962 நபர்கள் தொழிற்சாலைகளில் வேலையில் ஈடுபட்டு உள்ளனர் என்ற நிலையில் இதில் தமிழ்நாடு மாநிலத்தின் பங்கு 15% ஆக உள்ளது.
மொத்தமுள்ள 2,53,334 தொழிற்சாலைகளில் 15.66% தொழிற்சாலைகளைக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியன உற்பத்தித் துறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்தும் முதல் ஐந்து மாநிலங்கள் ஆகும்.
இந்த 5 மாநிலங்கள் ஆனது மொத்த உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பில் சுமார் 55% பங்கினைக் கொண்டுள்ளன.
பெரிய மாநிலங்களில், மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) அடிப்படையில், 2022-23 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.