மாநிலப் பறவைகள் ஆணையத்தினை மறுசீரமைப்பதற்கு என தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இது பறவைகள் சரணாலயங்கள், பறவைகள் கூடு கட்டும் சூழ்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார் சுற்றுலா வசதிகளைக் கண்காணித்து மேம்படுத்தும் பணியை மேற் கொள்ள உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தமிழக மாநிலப் பறவைகள் ஆணையத்தில் மும்பை இயற்கை சார் வரலாற்றுச் சங்கத்தினை (BNHS) ஒரு உறுப்பினராக சேர்ப்பதற்காக ஒரு திருத்தம் செய்யப்பட்டது.