TNPSC Thervupettagam

மாநிலப் பறவைகள் ஆணையம்

June 28 , 2023 518 days 410 0
  • தமிழ்நாடு அரசு பறவைகள் ஆணையத்தினை அமைத்துள்ளது.
  • இது பறவைகள் சரணாலயங்கள், பறவைகள் கூடு கட்டுவதற்கு உகந்தச் சூழ்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்தச் சுற்றுலா வசதிகளைக் கண்காணித்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் 17 பறவைகள் சரணாலயங்கள் உள்ள நிலையில், அவற்றுள் 14 ராம்சார் தளங்கள் உள்ளன.
  • மத்திய ஆசியப் பறவைகள் வலசைப் போதல் பாதையின் ஒரு பகுதியாக தமிழக மாநிலம் உள்ளது.
  • இந்த ஆணையம் பின்வரும் பணிகளை மேற்கொள்ளும்
    • அனைத்துப் பறவைகள் சரணாலயங்களுக்குமான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தினை மேற்கொள்ளுதல்,
    • பறவைகளுக்கான ஒரு புதிய பாதுகாக்கப்பட்டப் பகுதிகளை உருவாக்குவதற்கு உதவுவதற்காக உள்நாட்டு மற்றும் வலசைப் போகும் பறவைகள் வருகை தரும் இடங்களைக் குறிப்பிடுதல்,
    • பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும்
    • சூழல் சார்ந்தச் சுற்றுலா மேம்பாட்டு வாய்ப்புகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்