2023-24 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் சுமார் 31.7% அதிகரித்து 17,773.80 கோடி ரூபாயாக இருந்தது.
இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 13,499.24 கோடி ரூபாயாக இருந்தது.
முந்தைய ஆண்டில் 31.7% ஆக இருந்த மாநிலங்களின் மூலதனச் செலவினமானது, 2023-24 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 190.3% வரை வளர்ச்சியடைந்தது.
23 மாநிலங்களின் மொத்தச் செலவின மதிப்பான 2.62 லட்சம் கோடி ரூபாயில் பாதிக்கும் மேலான பங்கினை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்டுள்ளன.
மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 2024 ஆம் நிதியாண்டிற்கான தங்களின் வரவு-செலவுத் திட்ட இலக்கில் 40 சதவீதத்திற்கும் மேலான இலக்கினை எட்டியுள்ளன.
இருப்பினும், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்கள் 30 சதவீதத்திற்கும் குறைவான இலக்குகளை மட்டுமே எட்ட முடிந்ததால், இது அந்தந்த மாநிலங்கள் அவற்றின் இலக்கை விட குறைவான வரம்பையே எட்டியதைக் குறிக்கிறது.