TNPSC Thervupettagam

மாநில அரசுகளின் கடன் பெறுவதற்கான உத்தரவாதங்கள் குறித்த வழிகாட்டுதல்கள்

February 12 , 2024 157 days 180 0
  • இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட ஒரு பணிக்குழுவானது, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
  • இது நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு (மாநில அரசுகளால்) ஒரே மாதிரியான அறிக்கையிடல் கட்டமைப்பையும், ஒரே மாதிரியான உத்தரவாத உச்சவரம்பையும் பரிந்துரைத்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இதன் செயலாக்கமானது "மாநில அரசுகளின் சிறந்த நிதி மேலாண்மையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது".
  • ஒரு ‘உத்தரவாதம்’ என்பது ஒரு மாநில அரசானது பணம் செலுத்துவதற்கும், முதலீட்டாளர்/கடன் வழங்குபவரைக் கடனாளி கடனைத் திருப்பிச் செலுத்ததால் ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்குமான ஒரு சட்டப்பூர்வக் கடமையாகும்.
  • இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் (1872) படி, இது "ஒரு மூன்றாம் தரப்பினர் கடனைத் திரும்பிச் செலுத்தாமல் தவறினால் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவது அல்லது கடன் பொறுப்பினை பூர்த்தி செய்தல்" என்ற ஒப்பந்தமாகும்.
  • முதன்மையாக, மாநில அளவில் மூன்று சூழ்நிலைகளில் உத்தரவாதங்கள் பயன்படுத்தப்படுகின்றன:
    • முதலாவதாக, இருதரப்பு அல்லது பலதரப்பு நிறுவனங்களிடமிருந்துப் பெறப்படும் (பொதுத் துறை நிறுவனங்களுக்கு) சலுகைக் கடன்களுக்கு இறையாண்மை உத்தரவாதம் முன்நிபந்தனையாக இருக்கும்;
    • இரண்டாவதாக, முக்கியமான சமூக மற்றும் பொருளாதார நலன்களை வழங்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் கொண்ட பல்வேறு திட்டங்கள் அல்லது செயல்பாடுகளின் நம்பகத் தன்மையை மேம்படுத்துதல்; மற்றும்
    • கடைசியாக, பொதுத் துறை நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டிக் கட்டணங்களில் அல்லது மிகவும் சாதகமான விதிமுறைகளில் நிதி வளங்களைத் திரட்டுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்