இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் 2023 ஆம் நிதியாண்டிற்கான தங்களது நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக அதிகளவு விகிதத்தை ஒதுக்கியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மதிப்பிடப்பட்ட நிகர நிதிநிலைச் செலவினத்தில் 18.82 சதவீதத்தை கல்விக்காக அம்மாநிலம் ஒதுக்கியுள்ள நிலையில், பீகார் மாநில அரசானது 18.3 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் 77.9 சதவீதமாக உள்ள அதே சமயம் பீகார் மாநிலத்தின் கல்வியறிவு விகிதமானது நாட்டிலேயே மிகக் குறைவான அளவு கல்வியறிவு விகிதமாக 70.9 சதவீதமாக உள்ளது.
டெல்லி, அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களது நிதிநிலை செலவினத்தில் அதிகப் பகுதியை கல்விக்காக செலவிட்ட மாநிலங்களாகும்.
அவை முறையே 22 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 19 சதவீதம் அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.
கேரள மாநிலமானது 96.2 சதவீத கல்வியறிவு வீதத்துடன் நாட்டிலேயே அதிக கல்வியறிவு வீதம் கொண்ட மாநிலமாக உள்ள அதே சமயம் தமிழ்நாடு மாநிலத்தின் கல்வியறிவு வீதமானது 82.9 சதவீதமாக உள்ளது.
2023 ஆம் நிதியாண்டிற்கான நிகர நிதிநிலைச் செலவினத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டின் தேசிய சராசரி 15.4 சதவீதமாக இருந்தது.
கல்விக்கான தங்களது நிகர செலவினத்தில் ஒப்பீட்டளவில் சிறிய விகிதத்தை ஒதுக்கி உள்ள மற்ற மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் (12.7 %), கர்நாடகா (12.73 %), உத்தரப் பிரதேசம் (12.89 %), மற்றும் பஞ்சாப் (13.05 %) ஆகியவை அடங்கும்.
ஒட்டு மொத்த மதிப்பீடுகளானது, தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே கல்வியறிவு விகிதங்கள் அதிகமாக இருந்தாலும் அதன் கல்வியறிவு விகிதத்தை மேலும் அதிகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறுகிறது.
மத்திய அரசானது கல்விக்காக மொத்த நிதிநிலையில் 16.51% என்ற அளவில் ரூ.44,094 கோடியை ஒதுக்கியுள்ளது.