இந்திய ஆட்சிப் பணி அதிகாரியானவாசுகி தலைமையில் 6 பேர் கொண்ட மாநில உணவுக்குழுவை (state Food Commission) தமிழக அரசு அமைத்துள்ளது.
மாநிலத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை (National Food Security Act-NFSA) அமல்படுத்த முடிவு செய்து ஓராண்டிற்குப் பிறகு தற்போது இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 16-ன் படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்கும், மதிப்பிடுவதற்கும் மாநில அரசுகள் கண்டிப்பாக மாநில உணவுக் குழுவை அமைக்க வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, இக்குழுவானது-
உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களின் திறன்பட்ட அமலாக்கத்திற்காக மாநில அரசிற்கு அறிவுரை வழங்கும்.
மாநிலங்களின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அமலாக்கத்தினை மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு செய்யும்.
திட்டத்தினுடைய அமலாக்கத்தின் போது ஏற்படும் விதிமுறை மீறல்களால் உண்டாகும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்.
இத்திட்டத்தினுடைய அமலாக்கத்தின் போது எழுகின்ற விதிமீறல்களை தானாக முன் வந்து விசாரிக்கவோ (Suo moto) அல்லது புகாரின் பெயரில் விசாரிக்கவோ இக்குழுவிற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
ஓர் சிவில் நீதிமன்றத்திற்கு உள்ள அத்தனை அதிகாரங்களும் இக்குழுவிற்கு உள்ளது.
மாநிலத்தின் மொத்த2 கோடி நுகர்வோருள், 3.6 கோடி மக்கள் அதாவது 50.55 சதவீதத்தினர் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்களைப் பெறத் தகுதியுடையோராவர்.