TNPSC Thervupettagam

மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு 2022-2023

November 9 , 2023 255 days 254 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உணவுப் பாதுகாப்பில் முன்னேற்றத்தைத் தூண்டுவதற்காக மாநில வாரியான குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • 20 பெரிய மாநிலங்களில் மகாராஷ்டிரா, பீகார், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு குறியீட்டில் சேர்க்கப்பட்ட புதிய அளவுருக்களுக்கு ஏற்ப தரவுகளை சரி செய்த பிறகு, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 20 மாநிலங்களுள் 15 மாநிலங்கள் 2023 ஆம் ஆண்டில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
  • உணவுச் சோதனை உள்கட்டமைப்புப் பிரிவில் குஜராத் மற்றும் கேரளா ஆகியவை முதலிடம் பெற்றுள்ளன.
  • பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இணக்க அளவுருவில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
  • நுகர்வோர் அதிகாரமளிப்பிற்கான முன்னெடுப்புகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ள நிலையில் அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்