TNPSC Thervupettagam

மாநில வருவாய் சார்புப் போக்குகள்

January 21 , 2025 6 hrs 0 min 45 0
  • கடந்தப் பத்தாண்டுகளில், மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து வரும் பல நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் மானியங்களை அதிகமாகச் சார்ந்துள்ளன.
  • கடந்தப் பத்தாண்டுகளில் (2016 முதல் 2025 ஆம் நிதியாண்டு வரை) மாநிலங்களின் மொத்த வருவாயில் 23-30% ஆனது மத்திய அரசிடமிருந்துப் பரிமாற்றங்களாக பெறப் பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்தப் பங்கு 20-24% ஆக இருந்தது.
  • மேலும், 2000 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடச் செய்யும்போது கடந்தப் பத்தாண்டுகளில் மாநிலங்களின் வரி சாராத வருவாயில் சுமார் 65-70% ஆனது மத்திய அரசிடமிருந்து மானியங்களாகப் பெறப்பட்டன.
  • பல மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள வரி வசூல் வழிமுறைகளைப் பயன்படுத்தி அந்த வரிகளைத் திறம்பட வசூலிப்பதில்லை.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சொந்த வரி வருவாய் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆனது 2013-15 ஆம் நிதியாண்டில் 7.72 சதவீதத்திலிருந்து, 2022-24 நிதியாண்டில் 6.17% ஆக படிப்படியாகக் குறைந்துள்ளது.
  • கர்நாடகா, கேரளா, பீகார், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் இந்த நிலையே நிலவுகிறது.
  • மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய சில மாநிலங்களில் இந்த விகிதம் உயர்ந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் இது தேக்க நிலையிலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்