2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 23,500 கோடி ரூபாய் கடன் பெறப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் மாநில வளர்ச்சிக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மாநில அரசுகள்/ஒன்றியப் பிரதேச அரசுகள் 1,90,375 கோடி ரூபாய் கடன் வாங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2021-22 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒப்பீட்டுக் காலக் கட்டத்தில், தமிழக அரசு 23,450 கோடி ருபாயைக் கடனாகப் பெறுவதாகக் குறிப்பிட்டது.
ஆனால் உண்மையில் திரட்டப்பட்ட தொகை சற்று அதிகமாக 24,000 கோடி ரூபாயாக இருந்தது.
ICRA லிமிடெட் எனப்படும் மதிப்பீட்டு நிறுவனமானது, 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மகாராஷ்டிரா அதிகபட்சமாக 32,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடன் வாங்கி உள்ளதாக கூறுகிறது.