இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (செபி / Securities and Exchange Board of India - SEBI) தமிழ்நாட்டில் மலிவான வீடுகள் பிரிவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நிதியத்தை துவங்குவதற்கு தமிழ்நாடு அரசிற்கு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசானது, ‘தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதியம்’ என்ற மாற்று முதலீட்டு நிதியத்தின் கீழ் பிரிவு 1 என்பதை ஏற்படுத்தியுள்ளது.
இது ‘இந்தியாவில் வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான புதுமையான மற்றும் மாற்று நிதி’ என்ற நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.
இது ஐக்கியப் பொருளாதார மன்றம் (UEF - United Economic Forum), வர்த்தக மன்றம், உலக இஸ்லாமியப் பொருளாதார மன்ற கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.