உயிரித் தொழில்நுட்பத் துறையானது “மானவ் : மனித வரைபட முன்னெடுப்பு” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மனித உடலின் அனைத்துப் பகுதிகளையும் வரைபடமிடும் முதலாவது திட்டம் இதுவாகும்.
இத்திட்டமானது உயிரி அறிவியல் பாடத்தின் பின்னணியுடன் பட்டப் படிப்பில் இறுதியாண்டு அல்லது அதற்கு மேல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
இந்த வரைபடமானது சாதாரண நிலை மற்றும் நோயின் நிலை ஆகிய மனித உடலியலின் இரண்டு நிலைகள் குறித்த தகவல்களைக் கொண்டிருக்கும்.
இந்த வரைபடமானது பின்வருவனவற்றில் உதவவிருக்கின்றது.
நோய்க்கான காரணங்களைக் கண்டறிதல்
குறிப்பிட்ட வழிகளைப் புரிந்து கொள்ளுதல்
செல்கள் மற்றும் திசுக்களுடன் தொடர்புடைய உடலில் உள்ள நோயின் நிலையைக் கண்டறிதல்.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவவியலாளர்கள் ஆகியோர்களைத் தவிர்த்து இந்த வரைபடமானது மருந்து உற்பத்தியாளர்களுக்கும் உதவவிருக்கின்றது.