TNPSC Thervupettagam
May 14 , 2019 2023 days 701 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறையானது “மானவ் : மனித வரைபட முன்னெடுப்பு” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மனித உடலின் அனைத்துப் பகுதிகளையும் வரைபடமிடும் முதலாவது திட்டம் இதுவாகும்.
  • இத்திட்டமானது உயிரி அறிவியல் பாடத்தின் பின்னணியுடன் பட்டப் படிப்பில் இறுதியாண்டு அல்லது அதற்கு மேல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
  • இந்த வரைபடமானது சாதாரண நிலை மற்றும் நோயின் நிலை ஆகிய மனித உடலியலின் இரண்டு நிலைகள் குறித்த தகவல்களைக் கொண்டிருக்கும்.
  • இந்த வரைபடமானது பின்வருவனவற்றில் உதவவிருக்கின்றது.
    • நோய்க்கான காரணங்களைக் கண்டறிதல்
    • குறிப்பிட்ட வழிகளைப் புரிந்து கொள்ளுதல்
    • செல்கள் மற்றும் திசுக்களுடன் தொடர்புடைய உடலில் உள்ள நோயின் நிலையைக் கண்டறிதல்.
  • ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவவியலாளர்கள் ஆகியோர்களைத் தவிர்த்து இந்த வரைபடமானது மருந்து உற்பத்தியாளர்களுக்கும் உதவவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்