TNPSC Thervupettagam

மான்ஸ்டர் ஊதியக் குறியீட்டு அறிக்கை

March 12 , 2019 2088 days 694 0
  • மான்ஸ்டர் ஊதியக் குறியீட்டு அறிக்கையானது ஆராய்ச்சிப் பங்காளராக அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடனும் paycheck.in என்ற இணைய தளத்துடனும் இணைந்து மான்ஸ்டர் இந்தியா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது “இந்திய நிறுவனங்களில் பெண்கள்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
கண்டறியப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள்
  • இந்தியாவில் தன்னுடன் இணைந்து பணியாற்றும் ஆண்களை விடப் பெண்கள் 19 சதவிகிதம் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இந்தியாவில் பணியாற்றும் 60 சதவிகிதம் பெண்கள் பணியாற்றும் இடத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக எண்ணுகின்றனர்
  • துறை வாரியாக, தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பத்தினால் வழங்கப்படும் சேவைகளில் ஆண்களுக்கு ஆதரவாக 26 சதவிகித ஊதிய இடைவெளி காணப்படுகிறது. இதற்கு அடுத்து உற்பத்தித் துறையில் பெண்களை விட ஆண்கள் 24 சதவிகிதம் அதிகமாக ஊதியம் பெறுகின்றனர்.
  • சுகாதாரத் துறை, நலப்பணிகள் மற்றும் சமூகப் பணிகளில் பெண்களை விட ஆண்கள் 21 சதவிகிதம் அதிகம் ஊதியம் பெறுகின்றனர். வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் மட்டும் ஆண்கள் பெண்களை விட 2 சதவிகிதம் மட்டுமே அதிக ஊதியம் பெறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்