TNPSC Thervupettagam

மாபெரும் அல்டபெரா ஆமை (Aldabara Giant Tortoise)

June 30 , 2018 2341 days 802 0
  • செசெல்ஸ் நாடு நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு ஒரு ஜோடி மாபெரும் அல்டபெராவின் ஆமைகளை பரிசாக வழங்குகிறது.
  • செசெல்ஸ் அதிபர் டேனி பயூரின் (Danny Faure) இந்தியாவிற்கான ஐந்து நாள் சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவிற்கு பரிசாகக் கொடுப்பதற்காக இந்த ஆமைகள் கொண்டு வரப்பட்டன.
  • புதுதில்லியில் உள்ள மத்திய விலங்கியல் பூங்கா ஆணையம் (CZA - Central Zoo Authority) இந்த ஆமைகளை பராமரிக்க அனுமதி அளித்த பின்னர் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவிடம் இவை ஒப்படைக்கப்பட்டன.
  • மாபெரும் அல்ட்பெராவின் ஆமையானது (Aidabrachelys Gigantea) செசெல்ஸ் அல்டபெரா பவளத் தீவில் மட்டும் வாழும்.
  • இது கிரகத்தில் வாழும் பெரிய இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக நீண்ட நாட்கள் உயிர் வாழும் விலங்கினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. (200 வருடங்களுக்கு மேல் உயிர் வாழும்)
  • பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியல்படி, இந்த வகை ஆமைகள் ‘மறையத்தகு உயிரினங்கள்’ (vulerable) எனும் வகைப்பாட்டில் உள்ளன.
  • அல்டபெரா ஆமைகளை பரிசாக அல்லது கடனாக நட்பு நாடுகளுக்கு வழங்குவது செசெல்ஸ் அரசத் தந்திரமாகும்.
  • இதற்கு முன்பு செசெல்ஸ் 2010ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் பூங்காவிற்கு கடனாக இரண்டு ஆமைகளை அளித்தது. அதன் பின்னர் 2014-ல் ஒரு ஜோடி ஆமைகளை சீனாவில் உள்ள கியாங்ஷோ பூங்காவிற்கு அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்