TNPSC Thervupettagam
September 29 , 2024 15 hrs 0 min 37 0
  • தொலைதூர அண்டத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கருந்துளையில் இருந்து வெளிப் படுகின்ற இரண்டு பிரமாண்ட ஆற்றல் கற்றைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்த ஒளிக்கற்றைகள் ஆனது இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் மிகப் பெரியவை ஆகும்.
  • அவை சுமார் 23 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு வரை நீண்டுள்ளன என்ற ஒரு நிலையில் இது பால் வெளி அண்டத்தின் விட்டத்தை விட தோராயமாக 140 மடங்கு நீளம் கொண்டவையாகும்.
  • இந்தக் கருந்துளையானது பூமியிலிருந்து 7.5 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஓர் அண்டத்தின் மையக் கருவில் அமைந்துள்ளது.
  • ஓர் ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஓராண்டில் பயணிக்கும் தூரம் ஆகும் என்பதோடு இது 5.9 டிரில்லியன் மைல்கள் (9.5 டிரில்லியன் கிமீ) ஆகும்.
  • அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய கிரேக்கப் புராணங்களைச் சேர்ந்த ஒரு மாபெரும் அமைப்பின் ஒரு பெயரைக் கொண்டு போர்பிரியன் (Porphyrion) என்று இந்த இரண்டு ஒளிக்கற்றைகளுக்கும் பெயர் சூட்டியுள்ளனர்.
  • போர்பிரியன் ஆனது முன்னதாக மிகவும் நீளமானதாகப் பதிவு செய்யப்பட்ட ஒளிக் கற்றைகளை விட சுமார் 30% நீளமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்