தெற்கு ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான ஒரு நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அந்த நாட்டின் வானிலை ஆய்வு நிறுவனம் ஆண்டு அதன் முதலாவது "மாபெரும் நிலநடுக்க முன்னெச்சரிக்கையினை" வெளியிட்டுள்ளது.
நாங்காய் அகழிப் பகுதியில் இயல்பை விட வலுவான நில அதிர்வு மற்றும் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளதாக எச்சரிக்கை கூறியது.
நாங்காய் அகழி மண்டலம் ஆனது, ஜப்பானின் தென்மேற்கு பசிபிக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள 900 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கண்டத் தட்டு மூழ்கு நிலைப் பகுதியாகும்.
இந்த அகழியானது 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய நிலநடுக்கங்களை உருவாக்கியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆனது பொதுவாக இணையாகவே வரும் என்பதோடு இதில் இரண்டாவதாக வரும் நில நடுக்கம் ஆனது அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன.
சமீபத்திய அந்த "இரட்டை" நில நடுக்கங்கள் 1944 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்தன.
ஜப்பானின் வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிக்கையானது வெறும் எச்சரிக்கை தானே அன்றி முன்னறிவிப்பு அல்ல.