சுமார் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு பெரியப் பனிப்படலத்தில் புதைந்த நிலப்பரப்புகள் ஆனது வட கடலுக்கு அடியில் மிகவும் ஆழமானப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நார்வே பகுதியிலிருந்து பிரிட்டிஷ் தீவுகள் வரை பரவியிருந்த இந்தப் பனிப் படலம் ஆனது, உருகுவதற்கு முன்னதாக குறிப்பிடத்தக்க அடையாளங்களை விட்டுச் சென்றது.
இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது பல ஆண்டு காலப் பனிப்பாறை இயக்கவியல் மற்றும் மாறிவரும் பருவநிலை வடிவங்களுடனான அவற்றின் தொடர்பை அறிவியலாளர்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன.
இந்த மாபெரும் பனிப்படலமானது சுமார் 1.3 மில்லியன் முதல் 700,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மத்தியப் ப்ளீஸ்டோசீன் மாற்றம் (MPT) எனப்படும் கடைசிப் பனி யுகத்தின் போது உருவானது.
பனி யுகம் ஆனது தோராயமாக 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11,700 ஆண்டுகளுக்கு முன்பான காலக் கட்டத்தில் நிறைவடைந்தது.