அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மின் மற்றும் மின்னணு பொறியியலாளர்களால் (IEEE - Institute of Electrical and Electronics Engineers) மாபெரும் மீட்டர் அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கியானது (Giant Metre wave Radio Telescope) ஒரு ‘முக்கிய’ வசதியாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
மாபெரும் மீட்டர் அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கியானது முப்பது பரவளைய வானொலி தொலைநோக்கிகளைக் கொண்டதாகும்.
இது புனேவின் தேசிய வானொலி வானியற்பியல் மையத்தால் இயக்கப் படுகிறது.
இது மும்பையில் அமைந்துள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு பகுதியாகும்.
வானொலி வானியற்பியல் தேசிய மையத்தின்படி இந்தியாவிற்கு வழங்கப்படும் மூன்றாவது IEEE மைல்கல் அங்கீகாரம் இதுவாகும்.
முந்தைய இரண்டு IEEE மைல்கல் அங்கீகாரங்கள் 1895 ஆம் ஆண்டில் ஜே.சி.போஸுக்கும் 1928 ஆம் ஆண்டில் சி.வி.ராமனுக்கும் வழங்கப் பட்டது.
ஜே.சி போஸ் அவர்கள் கம்பியில்லா முறையிலான தகவல்தொடர்பின் தந்தையாகக் கருதப் படுகிறார்.