TNPSC Thervupettagam

மாபெரும் மீட்டர் அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி

December 3 , 2020 1458 days 615 0
  • அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மின் மற்றும் மின்னணு பொறியியலாளர்களால் (IEEE - Institute of Electrical and Electronics Engineers) மாபெரும் மீட்டர் அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கியானது (Giant Metre wave Radio Telescope) ஒரு ‘முக்கிய’ வசதியாக தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • மாபெரும் மீட்டர் அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கியானது முப்பது பரவளைய வானொலி தொலைநோக்கிகளைக் கொண்டதாகும்.
  • இது புனேவின்  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தால் இயக்கப் படுகிறது.
  • இது மும்பையில் அமைந்துள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு பகுதியாகும்.
  • வானொலி வானியற்பியல் தேசிய மையத்தின்படி இந்தியாவிற்கு வழங்கப்படும் மூன்றாவது IEEE மைல்கல் அங்கீகாரம் இதுவாகும்.
  • முந்தைய இரண்டு IEEE மைல்கல் அங்கீகாரங்கள் 1895 ஆம் ஆண்டில் ஜே.சி.போஸுக்கும் 1928 ஆம் ஆண்டில் சி.வி.ராமனுக்கும் வழங்கப் பட்டது.
  • ஜே.சி போஸ் அவர்கள் கம்பியில்லா முறையிலான தகவல்தொடர்பின் தந்தையாகக் கருதப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்